திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்

திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்  மனைவியை வாழ்க்கைத்துணை என முதல்முதலாக அழைத்தவரும் அவரே! கணவனும் மனைவியும் நண்பர்போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே.ஒருமை மகளிரேபோல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக்கூறினார். –  பேராசிரியர் சி.இலக்குவனார், திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர் : குறளமுதம் பக்கம் 524  

அண்ணாமலை தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், புழுதிவாக்கம் : தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  அண்ணாமலை  தெரு குடியிருப்போர் நலச்சங்கம் புழுதிவாக்கம், சென்னை 600 091 தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து நடத்தும் தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆடி 5, 2046 / சூலை 21, 2015 மாலை 6.00 தொழில் தொடங்கவும் கடன்உதவி பெறவும் வழிகாட்டப்படும் சிறப்புரை: முனைவர் ந.மணிமேகலை இயக்குநர் – தலைவர், மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவனர், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் திரு நெ.சீனிவாசலு, துணைஇயக்குநர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம், மத்திய அரசு, சென்னை…