உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 – தொடர்ச்சி) அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2 அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த சங்கீத வித்துவான்கள் பாரதியாரை அடிக்கடி பார்க்க வருவார்கள். மாயூரத்தில் சாத்தனூர்ப் பஞ்சுவையர், கோட்டு வாத்தியம் கிருட்டிணையர், திருத்துறைப்பூண்டி பாகவதர், பெரிய இராமசாமி ஐயர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை முன்சீபாக இருந்தமையால் அவரிடம் உத்தியோகம் பார்த்த குமாசுத்தாக்களும் வக்கீல்களும் அவருடைய பிரியத்தைப் பெறும்பொருட்டு அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அதற்காகச்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2) அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்’ என்ற சந்தோசத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கட்டம் தீர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாசுத்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 – தொடர்ச்சி) அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2 “தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகமடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள். பிள்ளையவர்கள்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2 – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று சிரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோச உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2) பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2 பரீட்சை இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக்கவிஞர் பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்” என்றார். அந்த மகாவித்துவானுக்கு முன், காட்டுப்பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக்கொண்ட நான் எவ்வளவு சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம் நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் இவ்வாறு…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2 தொடர்ச்சி) அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2 மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்தசேர்ந்தோம். உடனே என் தந்தையார் குளியல் முதலியன செய்துவிட்டுப் பூசை செய்யத் தொடங்கினார். என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூசைக்கு வேண்டிய பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன். அன்று புரிந்த பூசையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப் பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது. பூசைக்குப் பின் போசனம் செய்தோம். அப்பால்…