இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்! பேச்சுத்திறன் மிக்கவன், பொய்யை மெய்யென நம்ப வைக்கும் திறமை பெற்றவனாக இருக்கிறான்; வறுமையில் வாழ்பவர்களையும் வளமாக வாழ்வதுபோல் நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்; இன்னலில் வாழ்பவர்களிடமே இன்பத்தில் வாழ்வதுபோல் கருத வைக்கும் வல்லவனாக இருக்கிறான். இச்சூழலில் பொய்யர்களைக் குறை சொல்வதா? தங்கள் நிலையைக் கூட உணரா மக்களுக்காக இரக்கப்படுவதா? அறியாமை இருளில் மூழ்கியிருக் கச் செய்யும் ஆட்சியாளர்களைக் குறை சொல்வதா? பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே; மெய்போலும்மே (அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை 73) …
ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும்! உலகம் நல்லின்பம் பெற ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும். ஆட்சிமுறை செம்மையுற ஆளுவோர் உளம் நற்பண்பு அடைதல் வேண்டும். ஆட்சிமுறை எவ்வளவு சிறந்ததாய் இருப்பினும் ஆளுவோர் உளநிலை பண்பட்டிலதேல் பயனற்றுவிடும். ஆதலின் ஆட்சித்துறையில் அமர்வோர் உளம் செம்மையுற வேண்டும். அவர் மனநலத்தால் அவர் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களே நன்மை பெறுவர். உலகில் உள்ள பல நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புற்றுச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளன. ஒரு நாட்டின் இன்பதுன்பம் பிறநாடுகளையும் சார்கின்றன….
பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும்-சி.இலக்குவனார்
பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும் சிற்றினம்-சிறிய இனம். ஒழுக்கத்தாலும் அறிவாலும் குறைந்திருப்போரை இனமாகக் கொள்ளுதல் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளோர்க்கு நன்மை பயவாது. பதவியுயரச் செல்வமும் செல்வாக்கும் உயரும். செல்வம் உயர உயர வீணரும், வெற்றுரைகாரரும், சூதாடுவோரும் வலியவந்து சேர்வர். அவர்களை அகற்றாது நட்பாகக் கொள்ளின் ஆளும் தலைவர் அல்லற்பட்டு அழிய வேண்டியதுதான். பொறுப்புகளும் கடமைகளும் மிகமிக, ஒவ்வொன்றையும் நேரில் ஆய்ந்து நிறைவேற்றுதல் இயலாது. சுற்றியிருப்போர் சொல்லும் கூற்றை நம்புதல் வேண்டியவரும். அவர் சொல்லும் கூற்று உண்மை வயப்பட்டதாயின், யார்க்கும்…
ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் – சி.இலக்குவனார்
ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் ஆளும் தலைவர்க்கு வலிமையாவது மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் ஆகும். மக்கள் அன்பைப் பெற்றதலைவர் பகைவரை எளிதில் வெல்வர். மக்கள் அன்பைப் பெற விரும்பினால், கடுஞ்சொல் அற்றவராய் இருத்தலோடு நேர்மையாகவும், யாவரிடமும் ஒத்த அன்புடையவராகவும் ஒழுகுதல் வேண்டும். உறவினர்க்கு ஒரு நீதியும் உறவினர் அல்லாதார்க்கு ஒரு நீதியும் வழங்குதல் கூடாது. நெறிமுறை கடந்து யாவர் செல்லினும், அவரை விருப்பு வெறுப்பின்றி ஒறுத்து நன்னெறிப்படுத்துதல் வேண்டும். இல்லையேல் மக்கள் வெறுப்பர். மக்கள் வெறுப்பின், மாபெரும் தலைவரும் தாழ்ச்சியுற…
அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி-சி.இலக்குவனார்
அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி ஆட்சி புரியும் தலைமைப் பொறுப்பில் உள்ளோர். முறை வேண்டுவார்க்கும் குறை வேண்டுவார்க்கும் காட்சிக்கு எளியராய் இன்முகம் உடையராய் இருத்தல் வேண்டும். பதவியின் உயர்வால் மக்களை அச்சுறுத்தும் நிலையில் இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் பேயைப்போல் மக்களால் அவரும் அஞ்சப்படுவர். மக்கள் உளத்தில் அன்பை வளர்த்து ஆளுதல் வேண்டுமேயன்றி, அச்சத்தைப் புகுத்தி ஆளமுயலுதல் கூடாது. அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சிதான் ஆகும். மக்களாட்சி முறையில் பதவிகிட்டும் வரையில் மக்களோடு நெருங்கிப் பழகுவதும், பதவிகிட்டிய பின்னர்…
மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் – சி.இலக்குவனார்
மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் ஆளும் நிலையில் இருப்போர், மக்கள் விரும்பாத கொடுஞ் செயல்களைப் புரியின், “நம்மை ஆள்கின்றவர் கொடியர்” என்று மக்களால் வெறுக்கப்படுவர். மக்கள் ஆட்சியில் மக்களால் வெறுக்கப்படுவோர் ஆளும் நிலையிலிருந்து அகற்றப்படுவர். சில நாடுகளில், ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டோர், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், ஐந்தாண்டோ ஆறாண்டோ பதவியில் இருக்கலாம். மறுதேர்தலில் மக்கள் மதிப்பிழந்து வீழ்ச்சியடைவர். சில நாடுகளில் ஆளும் காலத்திலேயே கொடியோரை வேண்டாம் என்று விலக்கும் முறைமை இருக்கின்றது. ஆதலின் ஒரு குறிப்பிட்ட காலம்…
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! இந்தியச் சனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை! மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை! அடிமை வாழ்வை எண்ணி – அதில் கொடுமை நிலையெண்ணி விடுதலை வேட்கையிலே – அன்று வீரர் பலர் இருந்தனர் – அவர்கள் நித்தம் நித்தம் தம் நிலையை எண்ணி – தம் சித்தம் கலங்கி நின்றார் – அன்று சிந்தையில் துணிவு கொண்டார். யுத்தம் பல புரிந்து இரத்தம் பலர் சொரிந்து பெற்றது இந்தக் குடியரசு – அதை நன்றே பேணும் புவியரசு….
தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 தொடர்ச்சி) 2/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர். ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான்…
செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்! – கெர்சோம் செல்லையா
செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்! மக்களாட்சி என்ற பெயரில், மானம் விற்போர் ஆடுகிறார். சக்கையாக ஏழையைப் பிழிந்து சாற்றை எடுத்து ஓடுகிறார்! செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற செந்தமிழ் நாட்டார் வாடுகிறார். எஃகு போன்ற துணிவு இல்லை; இதனால் அழுது பாடுகிறார்! -கெர்சோம் செல்லையா
கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! – மு.இலெனின் சுப்பையா
கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! கானல் நீரில், குடிநீர், மின்சாரம், கன்னெய்(பெட்ரோல்), ஏப்புநோய்(எய்ட்சு), புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்து, பசிப்பிணி போக்கும் மருந்து, அறுவையின்றி அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து, தங்கம், வைரம் ஆகியன பெறலாம் என்ற இந்த அனைத்துக் கற்பனைகளும்கூடச் சாத்தியமாகலாம். ஆனால் தேர்தல் சீர்திருத்தம் செய்யாமல் ஊழலையும், கையூட்டையும் இந்த நாட்டில் இருந்து அறவே ஒழித்து விடலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளானாலும் இயலாது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த நாடு விடுதலைபெற்று…
சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! – சி.இலக்குவனார்
சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! இன்னும் மக்களாட்சி முறைக்குரிய தேர்தலுக்கு வேட்பாளர் களை நிறுத்துவது சாதி அடிப்படையிலேயே நிகழ்கின்றது என்பதை யார்தாம் அறியார். வேட்பாளர் தகுதியறிந்து வாக்குகள் கொடாது சாதியறிந்துதானே கொடுக்கின்றனர் பெரும்பாலார். சாதிகள் வேண்டா என்று பறை சாற்றும் கட்சிகள்கூட இந்நிலையைப் புறக்கணிக்க முடியவில்லையே! ஆகவே சாதிகளின் பேரால் நிகழும் அனைத்தையும் தடுத்து நிறுத்தற்குச் சட்டத்தின் துணையை நாடல் முற்றிலும் பொருத்தமேயாகும். எம்முறையிலானும் சாதிகளை ஒழித்தல் வேண்டும். எவ்வளவு விரைவில் சாதிகன் ஒழிகின்றனவோ அவ்வாளவு விரைவில் நாட்டு நலம் காக்கப் பட்டதாகும்….
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! – ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்
மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் பொதுவாழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் திருச்சி – 620 020, காசா நகர், சமால் முகமது கல்லூரி அருகில் உள்ள வி.எசு.எம். மகாலில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : . புடம்போடப்பட்ட புகழ்மிக்க தலைவர்கள் பிறந்த தமிழ்நாடு, இந்திய நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய பெருமையை ஒரு காலத்தில் பெற்று இருந்தது…