தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி-தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(அ.1.) நேர்காணல்: மினர்வா & நந்தன் இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும் போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணிதிரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்? அஃது ஒரு கடினமான வேலைதான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு சிற்றூருக்குச் சென்று தங்கி விட முடியாது. ஊரில் ஏற்கெனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித்தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள்தான்…