நள்ளிரவில் மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பதற்றம்

தேவதானப்பட்டியில் நள்ளிரவில் பதற்றம்! மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு   தேவதானப்பட்டியில் வெடி வெடித்ததால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது.   தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சளாறு அணைப்பகுதியில் தனியார் திருமண மண்படம் உள்ளது. இத்திருமண மண்டபத்தில் புல்லக்காபட்டியைச்சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய காதணி விழா நடைபெற்றது. காதணி விழாவையொட்டி தாய்,மாமன் வரவேற்பு நிகழ்ச்சியில் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளும், கண்ணாடிகளும் அதிர்வடைந்தன.   மேலும் மஞ்சளாறு அணைச் சாலையில் ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த சேக்கு என்பவருக்குச்…

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு…

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறும் மக்கள்

    தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறி இப்பகுதி மக்கள் செயல்படுகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை உள்ளது. மூலையாறு, தலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் நீரைத்தேக்கி மஞ்சளாறு அணையாகக் கட்டப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் கொள்ளளவு 57 அடியாகும். தற்பொழுது மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் தேவைக்காகவும், பாசனவசதிக்காகவும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தண்ணீர் வரத்து அதிகமாக…