வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 45. மடி யொழித்தல் மடிதஞ் செயல்களின் மந்த முறுதல். மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும். மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும். மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும். மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும். மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர். மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்….