என்ன செய்யப் போகிறோம்? – பா.செயப்பிரகாசம்
மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக அறிக்கை போதுமா? மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். அவர் முதலான மூன்று எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கே. எசு. பகவான் போன்றோர் மதவாதஆற்றலா்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள். அடிப்படை மதவாத ஆற்றலர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் குமுறல் மையம் கொண்டுள்ளது. எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்தின் போக்கைக் கண்டித்து, மதவாதச் செயற்பாட்டாளர்களின் காவலனாக முன்னிற்கும் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து எழுத்தாளர் நயனதாரா சேகல், சாகித்ய…