மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் புலவர்மணி இரா.இளங்குமரனார்

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த பொறியாளர் அமரர் பழ.கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒளிப்படங்கள். சிறப்புரை தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் .   தரவு : கவிஞர் இரா .இரவி

ஔவை உரைவேந்தரானது எப்பொழுது?

    செஞ்சொல் வீரர் ஔவை சு.துரைசாமி  அவர்களை உரைவேந்தர் எனக் குறிப்பிடுகின்றோம். இவரது உரைத்திறன்சிறப்பை அறிந்து எப்பொழுது யாரால், எவ்வமைப்பால் உரைவேந்தர் பட்டம் வழங்கப் பெற்றது என்பதை அறிவீர்களா?   உரைவேந்தரைச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் பாராட்டி மகிழும் பின் வரும் குறள்நெறிச் செய்தியைப் படியுங்கள். புரியும். உரைவேந்தர் பேராசிரியர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை மதுரைத் திருவள்ளுவர் கழகம் தைத்திங்கள் மூன்றாம் நாள் (16-01-64) சிறப்பாகக் கொண்டாடியது. ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் தலைமையில் தமிழவேள் பொ.தி. இராசர்…