வீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்

வீண் பூசல்களுக்கு வழிவகுக்கும்  தினமணி இன்றைய தினமணி (20/11/20) நாளேட்டின் நடுப்பக்கத்தில் “மனுவுக்கு ஏன் இந்த எதிர்மனு” என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் தமக்குத் தேவையான தரவுகளை மட்டும் தொகுத்துரைத்து உண்மைக்கு மாறான படிமத்தை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் மனுவின் மீது தேவையற்ற வெறுப்பு ‘உமிழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.ஆனால் ஏன் இந்த வெறுப்பு என்பதனைச் சிந்திக்கத் தவறிவிட்டார். தத்துவத்துறை வித்தகரும் தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் புலமையுடையவரும் வீரத்துறவி விவேகானந்தரைத் தம் இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்துப் பெருமைப்படுத்தியவருமாகிய மனோன்மணியம் சுந்தரம் (பிள்ளை) இந்த வெறுப்புக்குரிய காரணத்தைக்…

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்! பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது. தாய் அருகா நின்று தவ தைந்  நீராடுதல் – பரிபாடல் 11/91 நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115 இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134 தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59) தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? எனக் கேட்கிறார். ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி….