சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!
ஆந்திரரின் அளப்பரிய கொடுமை! வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்! சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்! கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்….