பசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு! – புகழேந்தி தங்கராசு
பசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு! பசு மாட்டை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்…… எதை உண்பது, எதை உடுத்துவது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்….. என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் வங்காளிகளின் ‘தீதி’ மம்தா பானர்சி. பசு மாட்டு அரசியல் தான் விந்திய மலைக்கு அந்தப்புறம் கொடிகட்டிப் பறக்கிறது. மாட்டு இறைச்சி வைத்திருப்பவர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்க ஒரு கும்பல், மாட்டுத்தோல் வைத்திருப்பவர்களைக் கட்டிவைத்துப் பிளக்க இன்னொரு கும்பல் என்று வெறியுடன் திரிகிறது வட இந்தியா. மாட்டுத்தோலை உறிப்பதைத் தடுக்க, மனிதத் தோலை உறித்துக்…