களி மண்ணும் கையுமாக…
களி மண்ணும் கையுமாக… இன்று (செட்டம்பர் 15) அறிஞர் அண்ணாவின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – 60ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தனது இறுதிப் பயணத்திற்கு அடி எடுத்து வைத்தது – தமிழர் நல கண்ணோட்டத்தில் மிகப் பெரிய இழப்பு. அண்ணா என்றால் அவர் முதலமைச்சர், திமுகவின் நிறுவனர் என்கிற அளவில்தான் இந்தத் தலைமுறையினர் தெரிந்து வைத்துள்ள ஒரே தகவலாகும். அண்ணாவின் சிந்தனை எத்தகையது? விநாயக சதுர்த்தி, விநாயகர் ஊர்வலம் நடக்கும் இந்தக் காலக் கட்டத்தில் அண்ணாவைப் பேச…
இலக்குவனார் – மயிலாடன்
ஒற்றைப்பத்தி இலக்குவனார் தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரை ஆரவாரமாக இருக்காது – ஆற்றொழுக்காக – அமைதி யாக – அதேநேரத்தில் ஆழமாக இருக்கும். அதில் தமிழ் மானமும், இனமானமும் போட்டிப் போட்டுக்கொண்டு துள்ளும். இரண்டாண்டு, மூன்றாண்டுக்குமேல் ஒரே இடத்தில் அவர் பணியாற்றியது கிடையாது – அதற்குக் காரணம் அவரது மொழி, இன, திராவிட இயக்கக் கொள்கைச் சித்தாந்தமும், அவற்றின் வெளிப்பாடுமே! மரம் சும்மா இருந்தாலும், காற்று அதைச் சும்மா இருக்க விடாது அல்லவா! அதேபோல, நாட்டு நடப்புகளும், போக்குகளும் அந்தத் தமிழ்…