பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்!
போராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்! திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். [சில நினைவுகள்: அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன். அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல்…
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம் தமிழ்த் திரைவானில் புகழ்மிகுப்பாடலாசிரியராக ஒளிவிட்டவர் கவிஞர் நா.முத்துக்குமார்(அகவை 41), மஞ்சள்காமாலையால் தாக்குண்டு பண்டுவம் பயனளிக்காமல் இன்று காலமானார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். இயக்குநராகப் பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்….
மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08
(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 தொடர்ச்சி) மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) ‘மரணம்’ – ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன். ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு…
கதிரவேலு மரணம் தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பு
மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து பன்னாட்டுத் தமிழ்ச்செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனை யடைந்துள்ளோம். ஆறுபதின்மங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடகப்பட்டறிவைக் கொண்ட ச.கதிரவேலு ஐயாஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம்வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறை நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர். தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளையும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்கு அண்மித்தநிகழ்வுகளையும் தனது…
பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்
பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14) சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது. தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்
இலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்
இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர். இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…