நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ(ஐயங்கா)ர் – 1. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 2 முன்னுரை ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில், ‘மாவு மாக்களு மையறி வினவே.’ ‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’ என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும். இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 4/7 தொல்காப்பியம் முழுமைக்கும் தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது என்பதை நுட்பமான ஆராய்ச்சித்திறனுடன் உணர்த்துகிறார்; இவற்றை, “எண்வகை மெய்ப்பாடுகள்: இலக்குவனாரின் ஆராய்ச்சித் திறன்” கட்டுரை மூலம்…
உலகத் தொல்காப்பிய மன்றம், தொடர்பொழிவு- 6, புதுச்சேரி
வைகாசி 10, 2047 -23.05.2015 திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ‘தொல்காப்பியம் – மரபியல்’ என்ற தலைப்பில் ஆறாம்பொழிவு நடைபெறுகின்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரையாற்றுகின்றார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்!
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) 06 “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே…
நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்
நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் சிதைவெனப் படுபவை வசையற நாடின், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல் கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க் குஇன்னா யாப்பிற் றுஆதல், தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனம்கோள் இன்மை, அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும். தொல்காப்பியர், தொல்காப்பியம், மரபியல்: 110