மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (தொல்காப்பியர், தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்…