தேவதானப்பட்டி தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி   தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.   பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம்…