வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14). மறவி யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 44. மறவி யொழித்தல் மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை. மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும். மறவியூக் கத்தின் மறுதலை யாகும். மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும். மறவி பலவகை யிறவையு நல்கும். மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும். மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர். மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது…