மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை: சி.இலக்குவனார்
மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து (குறள் 459) மறுமை -மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை, மன நலத்தின் ஆகும்-உள்ளத்தின் சிறப்பால் உண்டாகும், மற்று அஃதும்-மீண்டும் அங்ஙனம் ஆவதும், இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு உடைத்து-வலிமை உடையது ஆகும். அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லோர்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு…