மறைமலையடிகள் விருது,பொற்கிழி வழங்கல், பல்லவபுரம், சென்னை

புரட்டாசி 09, 2047 / செட்டம்பர் 25, 2016  மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா விருது, பொற்கிழி பெறுநர் : பழ.நெடுமாறன் மறை.தி.தாயுமானவன்

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் உதவுக!

தமிழன்புடையீர் தனித்தமிழியக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்பெறும் மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்(1916-2016) நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தமிழ் அறிஞர் பெருமக்களால் தனித் தமிழ்இயக்க நூற்றாண்டு விழா பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு தனித்தமிழ் இயக்கநூற்றாண்டு விழா, திருவள்ளுவராண்டு       2047 கன்னி 09 (25-9-2016) ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு  அடிகளார் வாழ்ந்த பல்லவபுர மாளிகையில் சிறப்பாக நடை பெறவுள்ளது.    அவ்வமயம் புகழ்பெற்ற இக்குடும்பத்தின் பிறங்கடையினர்கள் (வழித் தோன்றல்கள்) கலந்துகொண்டு அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினை மகிழ்வுடன் நினைவுகூர…