மலர்க்கொடிஅன்னையின் மலரடிபோற்றி!
மலர்க்கொடி அன்னையின் மலரடி போற்றி! யார்அர செனினும் தமிழ்க்குக் கேடெனில் போர்முர சார்த்த வீறுடை மறவர் இலக்குவனாரின் இனிய துணையாய் செருக்களம் நோக்கிச் செல்கென விடுத்த தருக்குடை மறத்தி;தமிழ்நலன் காக்கும் விருப்புடன் துணைவர் சிறைக்களம் புகினும் பொறுப்புடன் மக்கள் சுற்றம் காத்திடும் பெருந்துணை நல்லாள்; இல்லம் ஏகிய மறைமலை அடிகளும் திருக்குறளாரும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. அவர்களும் வள்ளுவர் காட்டிய வாழ்க்கைத் துணையாய் விருந்து பேணிடும் குறள்நெறிச் செம்மல் என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்; கலக்கம் நீக்கிக் கனிவைப் பொழிந்து இலக்குவர் போற்றிய இனிய…