இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி தமிழிலிருந்து தோன்றியது மலையாளம் என்ற உண்மை கிழக்குத் திசையை உணர்த்த அது (மலையாளம்) ஆளும் சொல்லினாலேயே (படி ஞாயிறு) விளக்கப்பெறும். 1 தமிழிலிருந்து பிறந்த மலையாளம் வேறுபட்டதற்குரிய காரணங்கள் : 2 1. சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியுடன் மிகுதியான தொடர்பு கொள்ளாதிருந்தமை. 2. 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை. …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு ஆரிய மொழியை ஒட்டி எழுத்து முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார். பின்னர்த் தமிழின் தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு அயல்மொழியாக வளரத் தலைப்பட்டு விட்டது. மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு தொடர்பு படுத்திக்கொள்ள விரும்பினரே யன்றித் தமிழருடன் உறவு முறைமை பாராட்ட விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்தனர்….
தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5 – ஞா.தேவநேயர்
(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5. செம்மை சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது. எ-டு: தமிழ் …
துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது – மயிலை சீனி. வேங்கடசாமி
துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது கன்னட நாடு, ஆந்திர நாடு, மலையாள நாடுகளைப் போலவே துளு நாடும் திராவிட நாட்டைச் சேர்ந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளைப் போலவே துளு மொழியும் திராவிட இன மொழியாகும். அசோகப் பேரரசரின் சாசனங்களிலே கூறப்படுகிற சத்தியபுத்திர நாடு என்பது துளுநாடே என்பதை முன்னமே கூறி யுள்ளோம். சங்கக் காலத்திலே துளு நாட்டில் வழங்கி வந்த மொழி தமிழ் என்பதையும் துளு நாட்டு அரசர் தமிழ்ப் புலவரை…
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு தமிழுக்குக் குரல் கொடுக்கும் காந்தி தனித்து விடப்படலாமா? உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது. விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர். செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது…
சேரர் – சொல்லும் பொருளும்: மயிலை சீனி.வேங்கடசாமி
சேரர் – சொல்லும் பொருளும் இராமாயணக் காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும்போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார். கிரேக்கத் தூதரான மெகசுதனீசு என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார். திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும்…
தாய்த்தமிழும் மலையாளமும் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 4 தமிழ் மக்களே பழந்தமிழ்ச் சொற்களைத், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான பிற சொற்களாக – இம்மொழிகள் பேசப்பட்ட பகுதி ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்த பொழுது வழங்கிய தமிழ்ச் சொற்களே இவை என்பதை உணராமல் – கருதும் பொழுது இம் மொழி பேசும் மக்கள் எல்லாச் சொற்களும் தமக்குரியனவே எனக் கருதுவதில் வியப்பொன்றும் இல்லை. எனவேதான் அவர்கள், தமிழ்ச் சொற்கள் கண்டறியப்படும் தொல்லிடங்களையெல்லாம் தம் மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். எனவே, தமிழ்க்குடும்ப மொழிகளில்…
தாய்த்தமிழும் மலையாளமும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆனி 27, 2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 3 ஒருவேளை மலையாள மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது; இப்பொழுது அவ்வாறில்லை எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வகுப்பு மலையாளப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு: பாவ பாவ பாவ நோக்கு புதிய புதிய பாவ நோக்கு கய்ய வீசும் பாவ நோக்கு கண்ணிமய்க்கும்…
தாய்த்தமிழும் மலையாளமும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 2 கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம் நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2] மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள்…
தாய்த்தமிழும் மலையாளமும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
தாய்த்தமிழும் மலையாளமும் 1 தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின் தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை வரலாறும் எழுதப்பெற்று அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இங்கே முழுமையாக ஆராயாவிட்டாலும் தமிழுக்கும்…