மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் வணிக விழா
வணிக விழாவும் மாணவர்கள் சிறப்பிப்பும் மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின் வணிக விழாவும் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும் மாத்தளையில் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது வணிகமன்றத்தின் கலை நிகழ்வும் இடம் பெற்றது. இச் நிகழ்விற்குக் கல்வி அதிகாரிகள், மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலிய பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டார்கள். பா.திருஞானம் – 0777375053