மாணிக்கவாசகம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மாணிக்கவாசகம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தேவகோட்டை: பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு வந்தவர்களைப் பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கிக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். அறிவியல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பெரியசாமி, தேவகோட்டை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் பாய்ம அழுத்த விதி(பெர்னோலி கோட்பாடு), பகல் – இரவு…
மாணிக்கவாசகம் பள்ளியில்விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா
மாணிக்கவாசகம் பள்ளியில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவர் செகதீசு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை த.மு.எ.ச.கலை இலக்கிய இரவு விழாவில் மாநில அளவில் பரிசுகளை வென்ற இப்பள்ளி மாணவிகள் தனலெட்சுமி, பரமேசுவரி, காவியா ஆகியோருக்கு விருதுகளும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன. …
கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு
கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏறக்குறைய 1320 பள்ளிகளில் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்று மட்டுமே முதற்கட்டமாகத் தேர்வாகி, சிவகங்கை மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் சார்பாக உலக அளவில் முதன் முதலாக இதற்கெனக் காணொலி ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை, பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளைப் பள்ளித்…
தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா
தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவி பரமேசுவரி, தினமலர் பட்டம் சார்பாக நடைபெற்ற பட்ட அவை(சபை) நிகழ்வுக்குத் தேர்வு பெற்று சென்னையில் (வைகாசி 23, 2047 / சூன் 05,2016 அன்று) நடைபெற்ற பட்டஅவை(சபை) நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ், புத்தகங்களைப் பரிசாகப் பெற்றார். திரு.நல்லகண்ணு, திரு.இரவிக்குமார், தினமலர் துணை ஆசிரியர் திரு.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். மறுநாள் (வைகாசி 24, 2047 / சூன் 06, 2016 அன்று) பள்ளியில்…
சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு
சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு தேவகோட்டை – தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் முற்றோதுதல் நிகழ்வில் அனைத்துப்பாடல்களையும் பாடிய பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்திரி, கார்த்திகேயன், இரஞ்சித்து, தனலெட்சுமி, பார்கவிஇலலிதா, கண்ணதாசன், இயோகேசுவரன், தனம், இராசலெட்சுமி, சௌமியா ஆகியோருக்குத் தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவுப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் சிவநெறிச் செல்வர் பேரா.சொக்கலிங்கம், பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள். மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரியை…
கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது – காவல் ஆய்வாளர் அறிவுரை
கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது காவல் ஆய்வாளர் இரமேசு அறிவுரை தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது எனப் பேசினார். விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார் இரமேசு சிறப்புரையில், “சிறு…
பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள்!
பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள் வட்டாட்சியர் பேச்சு தேவகோட்டை: – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 100 விழுக்காடு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு வண்ணக்கோலப் போட்டி நடை பெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சேது நம்பு, வருவாய் ஆய்வாளர் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேசுவரி தலைமை தாங்கிப் பேசுகையில், நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடமும், உங்கள் வீட்டருகே உள்ள அனைவரிடமும் சொல்லி வாக்களிக்கச் …
மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்தவர்களை மாணவி காயத்திரி வரவேற்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் நாள் தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் விளக்கமாக பேசினார். ஆசிரியை செல்வமீனாள் அறிவியல் ஆய்வுகளை எளிய முறையில் மாணவர்களுக்குச் செய்து காண்பித்துச் செயல் விளக்கம் அளித்தார். விழாவில் 6ஆம் வகுப்பு மாணவி காவியா, சென்னை அக்கினி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல்…