நவம்பர் 1 : இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!  இந்தியாவில்  1947இல் கட்டுண்டோம்! 1953இலும் 1956இலும் மொழிவாரி மாநிலமாக வெட்டுண்டோம்! இதுவே தமிழ் நாடு மாநிலத்தின் வரலாறு. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி(1956)யும் இதில் மேற்கொண்ட திருத்தத்தின்படியும் ஃபசல் அலி(Fazal Ali) தலைமையில், இருதயநாத்து குஞ்சூரு(H. N. Kunzru) கா.மா.பணிக்கர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநிலங்கள் மறுசீரமைப்பு நிகழ்ந்தது. இதனால் 6 ஒன்றியப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. சம்மு-காசுமீர், உத்தரப்பிரதேசம், ஒரிசா மாநில எல்லைகளில் எந்த மாற்றமும்…