தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!
(தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்துபுதைகுழியில் உறங்குகிறார்! சென்ற 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததிலிருந்து தொடங்கியதுதான் மாரிமுத்து-மகாலட்சுமி ஆணவக் கொலைக்கு நீதி கோரும் போராட்டம். இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தாழி அன்பர்களாகிய உங்களுக்குத் தெரியும்….