தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!
(தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்துபுதைகுழியில் உறங்குகிறார்! சென்ற 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததிலிருந்து தொடங்கியதுதான் மாரிமுத்து-மகாலட்சுமி ஆணவக் கொலைக்கு நீதி கோரும் போராட்டம். இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தாழி அன்பர்களாகிய உங்களுக்குத் தெரியும்….
மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த…
இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2
இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 இந்தோனேசியாவின் எதிர்க்கட்சியான பார்தை கெரிண்டிரா (PARTAI GERINDRA) அமைப்பில் அவைத்தலைவர்(chairman) பொறுப்பு வகிக்கும் தமிழர் திரு கோபாலன் அவர்களுடன் இலக்கியவேல் இதழாசிரியர் சந்தர் சுப்பிரமணியன் நடத்தும் நேர்காணல். வணக்கம். இலக்கியவேல் வாசகர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முனைந்ததற்கு நன்றி. வணக்கம். ? நீங்கள் இந்தோனிசியாவில் வாழ்கிறீர்கள். உங்கள் மூதாதையர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு சென்றது குறித்த தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? என்னுடைய தாத்தா இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர். நான் மூன்றாவது…
மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள்!
மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள்! மாவட்டக் கல்வி அதிகாரி அறிவுரை தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘கவிதை சொல்லுதல்’ போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்டக் கல்வி அதிகாரி மாணவர்களிடம் மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள் எனப் பேசினார். கவிதை சொல்லுதல் போட்டிக்கு வந்தவர்களை மாணவர் சீவா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி மாணவர்களிடம்…