(தமிழின்பம் தனி இன்பம் 2/3 – முடியரசன் தொடர்ச்சி)  தமிழின்பம் தனி இன்பம்  3/3     மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்பகை காரணமாகச் சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். பொருது வெற்றியுங் கொண்டான். அவ் வெற்றிச் செருக்கால் ஊரைப் பாழ் படுத்த ஆணையிடுகிறான். படைவீரர் பாழ்ச்செயலில் ஈடுபடு கின்றனர். பெரும் பெரும் மாளிகைகள் தரைமட்டம் ஆக்கப்படு கின்றன. அதனைக் கண்டு, மாறன் வெற்றி வெறிகொண்டு நகைக்கின்றான். ஆனால், ஓரிடத்துக்கு வந்ததும் அவனது வெறி விலகு கிறது. ஆணவச் சிரிப்பு அடங்குகிறது. “அதோ அந்த மண்டபத்தை…