மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! ~ இ.பு.ஞானப்பிரகாசன்
[‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலைத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!] பல்லவி மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – கருங் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – பசும் புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும்…
தமிழின ஏட்டில் தலைப்பென வாழ்பவர் ! – நா.இராசா இரகுநாதன்
விடுதலைக் கருவை கழுத்தில் சுமந்தனர் ! துயிலும் இல்லம் உரைப்பது ஓன்று ஆணும் பெண்ணும் ஓர் நிறை என்று! ஆயிரம் தாய் சுமந்த உயிர்கள் அன்னை பூமியில் ஆழ(ள)ப் புதைந்தன!. பனிக்குடம் உடைத்து புவிமுகம் கண்டவர் தாயகம் காக்க நீர்க்குடம் விண்டனர் !. தாய்முகம் காண மாரைச் சப்பியோர் தாய்நிலம் பேண மரணத்தைச் சப்பினர்!. விடுதலை வெடியை மண்ணில் புதைத்தவர் வெடியின் திரியாய் தம்முயிர் தந்தனர் ! ஆயிரமாண்டு விலங்கினை உடைத்திட ஆலகால விடத்தினைக் கடித்தனர் ! சிங்கள இனவெறி கொடுமையை விரட்டிட…
தேசிய நினைவெழுச்சி நாள், அமெரிக்கா
அன்புக்குரிய எம் அருமைத் தமிழ் மக்களுக்கு, வரும் கார்த்திகை மாதம், 27ஆம் நாள், பிற்பகல் 6:00 மணியளவில் எமக்காகவும் எம் மண்ணுக்காகவும் தம் உயிரை ஈந்த வீர மறவர்களை நாம் நினைவு கூரவுள்ளோம். தயவு செய்து உங்கள் எல்லோரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 6
(முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4
( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள்…