தமிழக வரலாறு  5/5 – மா.இராசமாணிக்கனார்

(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு  5/5  மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…

தமிழக வரலாறு  4/5 – மா.இராசமாணிக்கனார்

(தமிழக வரலாறு  3/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு  4/5 கல்வி நிலை   சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை….

தமிழக வரலாறு  3/5 – மா.இராசமாணிக்கனார்

(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி) தமிழக வரலாறு  3/5 – மா.இராசமாணிக்கனார்     வாணிகம்   கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய…

தமிழக வரலாறு  2/5 – மா.இராசமாணிக்கனார்

 (தமிழக வரலாறு 1/5 – மா.இராசமாணிக்கனார் : தொடர்ச்சி) தமிழக வரலாறு  2/5  ஆட்சி முறை   சங்கக் காலத்தில் நாட்டை ஆட்சிபுரிவதில் அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இருந்தன. பிற்காலத்தில் பலதுறை அமைச்சர்களும் பலதுறை அலுவலர்களும் இருந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. அரசனுடனிருந்து ஆட்சி முறைகளைக் கவனித்த அமைச்சர்கள், ‘உடன் கூட்டத்து அதிகாரிகள்’ எனப்பட்டார்கள். நாடு பல மண்டலங்களாகவும், மண்டலம் வளநாடு, நாடு, கூற்றம், சிற்றுார் என்றும் பலவாறு பிரிக்கப்பட்டிருந்தன. ஊராட்சி  ஒவ்வோர் ஊரும் ஊரவையார் ஆட்சியில் இருந்தது. ஒவ்வோர் ஊரும்…

தமிழக வரலாறு 1/ 5 – மா.இராசமாணிக்கனார்

தமிழக வரலாறு 1/ 5  அரசியல் வரலாறு  இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி. பி. 300-க்கு முற்பட்டவை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே குறிக்கின்றன. இம்முடி யுடைய மூவேந்தர் நெடுநில மன்னரென்றும், இவர்க்கு அடங்கியும் அடங்காமலும் இருந்த பாரி, பேகன் முதலியோர் குறுநில மன்னர் என்றும் பெயர் பெற்றிருந்தனர்….