ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’
பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ் – பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம் பருமாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன். அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன். பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர்…
பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் பருமா நாடானது, மியன்மா என இப்பொழுது அழைக்கப்பெறும். (சங்கக்காலத்தில் காழகம் என அழைக்கப்பெற்றது.) இங்குள்ள தமிழ்க்கல்வி வளர்ச்சி மையத்துடன் இணைந்து நந்தனம் அமைவம் இணைந்து இலக்கியப் பெருவிழா விழாவை நடத்தியது. அமைப்பாளர் சந்திரசேகர் தமிழ்நாட்டிலிருந்தும் ஈழத்திலிருந்தும் தமிழன்பர்களை அழைத்துச் சென்றார். இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் இருந்து இலக்கியக் குழு பங்கேற்ற முதல் இலக்கிய விழாவாகும். (இவ்விழாவில் சிறப்புரையாற்ற நான் சென்றிருந்தேன். இவ்வுரையைப் பின்னர்த் தனியே அளிக்கின்றேன்.) இவ்விழாவில் மேனாள் அமைச்சர் நல்லுச்சாமி, நீதியாளர் வள்ளிநாயகம், மரு. இராமேசுவரி நல்லுச்சாமி, மூத்த…
புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 – சொருணபாரதி
(புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 தொடர்ச்சி) புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 அத்துடன், தான் பார்த்த ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறார். பசுமந்தான் அருள்மிகு வரதராசப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார். அது மட்டுமில்லாமல், அந்தக் கோவிலை வழங்கிய திருவரங்கம்இராசா இராமநாத(ரெட்டியா)ர்பற்றிய குறிப்பையும் தருவதோடு, அவர்தம் கொள்ளுப்பேரன் வாசுவைச் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமின்றி, கோவிலில் தட்டில் போடப்படும் காசைக் கூட அருட்சுனைஞர் (அர்ச்சகர்) எடுத்து உண்டியலில் போட்டு விடுவதைப் பற்றியும், கவனிப்புடன் சொல்கிறார். கம்பையில் ஒரு…
புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 – சொருணபாரதி
புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 நெருப்புக் கோளமான கதிரவனிலிருந்து உடைந்த துண்டின் பயணம் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமியாக உருவெடுத்தது. பூமிப்பந்தின் பல நூறாயிரம்(இலட்சம்) ஆண்டுகளின் பயணம் உயிர்களை உருவாக்கியது. உயிர்களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பயணம் மனிதனை உருவாக்கியது. மனிதனின் வாழ்க்கையும் ஒரு பயணம்தான்! பயணம் பட்டறிவுப் புதையலைக் கண்டெடுக்கும் அகழாய்வு; அறிவைச் சுரக்கும் பள்ளதாக்கு. பயணம் மனிதர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பயணங்கள் பல கண்டங்களைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் நாடுகளைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் புதிய…
இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்
நந்தவனம் பீடம் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர் புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6.00 வரை வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன் தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம் வாழ்த்துரை : மு.க.முனியாண்டி சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் ‘நான்கண்ட மியான்மர்‘ நூல் வெளியீடு கலைநிகழ்ச்சிகள் கவியரங்கம் தலைமை : முனைவர் கீரைத்தமிழன் விருது வழங்கல் & நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி நன்றியுரை : ஆர்.ஏ.செல்வக்குமார் நந்தவனம் சந்திரசேகரன் ஆர்.ஏ.செல்வக்குமார் ஆறுமுகம்…
மியான்மரில் இலக்கியப் பெருவிழா
இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்
மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…
மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு – 2014
அன்பார்ந்த தமிழ் உறவுகளே… வணக்கம். மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014) என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள், மியன்மா நாட்டின் வணிக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும். உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மலேசியா-சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் பதிவு செய்ய – தொடர்பு கொள்ள வேண்டுபவர் & மியன்மா ஒருங்கிணைப்பாளர்…