தேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்! சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!   தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை.   மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன்…