58searching_body02

தேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப்

புதுமைப்படுத்தவேண்டும்!

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

  தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை.

  மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன் கிணறு உள்ளது. சையது இசுமாயில் என்பவரது மகன் பக்ருதீன் வலிப்பு நோய் வந்து இக்கிணற்றில் விழுந்துவிட்டான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் அற்புதம் தலைமையில் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். கிணறு 60 அடி ஆழமாக இருந்ததால் உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்பட்டது. அப்பகுதியைச்சேர்ந்த வடக்குத்தெரு இளைஞர்கள் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் தீயணைப்பதுறையினருடன் சேர்ந்து தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அதன் பின்னர் 4 மின் பொறிகள்,   புதுமைப் படப்பொறி உதவியுடன் உடல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்ட 7 மணிநேரத்திற்குப் பின்னர் உடல் மீட்கப்பட்டது. இதன் தொடர்பாகக் அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தீயணைப்புத்துறையில் பண்டைய காலத்தில் உள்ள கயிறு மூலம் கொக்கிபோட்டு தேடும் நிலை தான் உள்ளது. இதனால் உடல் மீட்பத்தில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது.

58elec.motor

  தீயணைப்புத் துறையில் புதுமைப்படப்பொறிகள், தண்ணீருக்குள் இறங்க நீச்சலாடைகள், பிற புதுமைக் கருவிகள், தண்ணீரை இறைக்கக்கூடிய இயந்திரங்கள் போன்றவை இல்லை. இதனால் தீயணைப்புத்துறையினர் உடலைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

  மேலும் தேவதானப்பட்டி அண்மையில் வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமை, சிறுத்தை, புலி, மான் போன்ற வனஉயிரினங்களும் அவ்வப்பொழுது கிணறுகளில் விழுந்து விடுகின்றன. அதனை மேலே கொண்டுவருவதற்குரிய புதுமை இயந்திரங்கள் இல்லாததால் வனஉயிரினங்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துத்தான் மேலே வருகிறது. அதன் பின்னர்தான் வனவிலங்குகளை எடுக்கமுடிகிறது.

 அதே வேளையில் தனியார்களிடமும், தனியமைப்புகளிடமும் புதுமைப்படப்பொறி, புதுமை மீட்புக் கருவிகள் உள்ளன. புதுமைப் படப்பொறிகள் வாடகைக்கு எடுக்கவேண்டும் என்றால் உரூ.3000 வரை வாங்குகிறார்கள். இதே போலப் புதுமைக் கருவிகளுடன் உடலை மீட்பதற்குச் சோழவந்தான், கடமலைக்குண்டு பகுதிகளில் உள்ள சுரக்காம்பட்டி பகுதியில் ஆட்கள் உள்ளனர். அவர்கள் ஒரு மணிநேரத்திற்கு உடலை மீட்பதற்கு உரூ.10,000 வரை பெறுகிறார்கள். இந்தப் புதுமைக் கருவிகள் தீயணைப்புத்துறையில் இருந்தால் உடல்களை உடனே மீட்டுவிடலாம்.

58searchingbody

   தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சளாறு அணைப்பகுதியில் குளிக்கச்சென்ற இளைஞர் இறந்து 1 வாரம் கழித்து அணைப்பட்டி அருகே உடல் எடுக்கப்பட்டது.

  அதே போல மொக்கையன் கிணற்றுப்பகுதியில் பல சிறுவர்கள் இறந்துள்ளனர். நவீனக் கருவிகள் இல்லாததால் உடல்மீட்க இன்னல் ஏற்படுகிறது. எனவே தீயணைப்புத்துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் புதுமைக் கருவிகளை வாங்குவதற்கு மாவட்ட நிருவாகம் முன்வரவேண்டும்.

  அதே போல ஆழ்துளை கிணறுகளில் சிறிய குழந்தைகள் விழுந்துவிட்டால் அதனை மீட்பதற்குத் தனியார் நிறுவனங்களைத்தான் தீயணைப்புத்துறையினர் நாடவேண்டியுள்ளது. இதனால் பல குழந்தைகள் ஆழ்துளைக்கிணறுகளில் விழுந்து உயிரை விடுகின்றனர்.

எனவே தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

58vaigai aneesu