கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும் தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும் தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும் இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053/09.01.2023 அன்று கூடியது. மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும் ஆளுநரால் இந்நாள் கறுப்பு நாளாக மாறிவிட்டது. பா.ச.க.ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறல் நடப்பது வழக்கமாகி விட்டது. அதுபோல் இங்கும் ஆளுநரின் அத்துமீறல் நடந்து உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாள் ஆளுநர் அரசின் உரையை வாசிப்பது மரபு. இது…