கவிக்கோ பவளவிழா
கவிக்கோ பவளவிழா கவிக்கோ அப்துல் இரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற ஐப்பசி 10 & 11 / அக்.26 & 27 ஆம் நாள்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அரசியல், இலக்கியம், திரைப்படம், கலை, இசை, சமயம், இயல், இதழியல் & ஊடகம் என அனைத்துத் துறைகளையும் சார்ந்த தலைவர்கள், புகழாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குநர்கள், திரைத்துறைப் படைப்பாளிகள், கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள்,…
தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா
தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா
சிந்தனையை விதைப்பது எழுத்தாளர்களின் கடமை
சமூக மாற்றத்திற்கான சிந்தனையை விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும் வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் உரை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கட்டுரை நூல்கள் அறிமுக விழாவில் (புரட்டாசி 17 / அக்.04) சமூக மாற்றத்திற்கான சிந்தனையைத் தனது படைப்புகளின் வழியே விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார். கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன்,…
பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி
நான் நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம் என்றால் ஒற்றுமையின் சின்னம்…
நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து
நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டா மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாப்பளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் வேட்கைதீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் மூச்சாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறிப் பெருங்கடலில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து மணம்தந்து உதிரவேண்டும்நான்! நிலவாய் உதித்து வளர்ந்து தேயவேண்டும்நான்! கடவுளோர்நாள் வந்தென்னிடம் கண்முன்னே தோன்றினால், ஈசலாகப் பிறந்து ஓர்நாளில் பிறந்துமடியும் வரமொன்று கேட்பேன் நான்…..நான்! நான், காரைக்குடி பாத்திமா அமீத்து, சார்சா தரவு…
துபாயில் புகழ்மிகு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை
புகை இல்லாத புகைவண்டி – சின்னா சர்புதீன்
புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார் வீறுகொண்டு பறக்குதே நீண்டுநெடுங் தூரம்ஓடி நிற்குமிடம் தன்னிலே மீண்டும்மக்கள் தம்மைஏற்றி மிகவிரைவாய்ச் செல்லுமே புகையிரதம் எனஇதற்குப் பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத இன்றும் அது புகையிரதம் தானடா ஆடுமாடு மனிதர் பொருள் அத்தனையும் சுமக்குமாம் வீடுபோன்ற அறைகள்பல வரிசையாக இருக்குமாம் காடுமேடு வயல்நிலங்கள் கடல்கடந்தும் போகுமாம் நாடிரண்டை மூன்றைத்தொடுத்து…
அமீரகத்தில் கோடை விழாக்கள்
அமீரகத்தில் கோடை விழாக்கள் அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து
அமீரகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு
– முதுவை இதாயத்து
சமூக ஞானத்தைப் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை!
மனிதன் மன்பதை அறிவைப் பெறுவதற்கு புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன – வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு – வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், மன்பதை அறிவைபயும் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார். கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர்…
காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி
மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெறவுள்ள காமராசர் பிறந்த நாள் விழா கவிதைப் போட்டிக்கு, போட்டியாளர்கள் தங்களது கவிதைப் படைப்புகளை சூன் 30 ஆம் நாளுக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமவீரர் காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பேரவை சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். “எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?” என்ற தலைப்பில், மரபு மற்றும் புதுக்கவிதைகள்…
படைப்பிலக்கியங்களால் மட்டுமே முடியும்!
படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின் மன உலகை மாற்றிட முடியும்! குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார். இவ்விழாவிற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.சீவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘படித்துப் பழகு‘…
