கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’

கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது.     மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார்.     புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி…

நெடுந்துயர் அகன்றேயோடும் ! – எம்.செயராமன்

வான்முகில் வளாது பெய்கவென வாயார வாழ்த்துப் பாடி வையத்தில் விழாக்கள் தோறும் மனமாரப் பாடி நிற்போம் வாழ்த்தினைக் கேட்டு விட்டு வானுறை தேவர் எல்லாம் வையகம் வாழ்க எண்ணி மாமழை பொழியச் செய்வர் வறண்டு நிற்கும் பூமியெல்லாம் வான் மழையைக் கண்டுவிட்டால் மகிழ்வு கொண்டு வானோக்கி மனதார நன்றி சொல்லும் வயல்நிறையும் குளம் நிறையும் வயலுழுவார் மனம் மகிழும் தினமும் மழை பெய்கவென தீர்மானம் எடுத்தும் நிற்பார் அகமகிழ வைக்கும் மழை ஆபத்தைத் தந்த திப்போ அனைவருமே மழை பார்த்து அலமந்தே நின்று விட்டார்…

அவதானப் புலவர் அபூபக்கர் – பேராசிரியர் மு. அப்துல் சமது

  தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’   “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்    ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு    ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ    டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே” என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார்.   ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான செய்திகளைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறும் விதத்தில் இக்கலை…

துணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்

துணிவு    துணிந்தவனுக்குக் கடலின் ஆழம்கூட ஒரு சாண் வயிறு துணிவு இழந்தவனுக்கு மண்பானையின் ஆழம்கூட கடலின் ஆழம் என்பான்… துணிந்தவனுக்கு தலையெழுத்து ஒரு தடையில்லை.. துணிவு இழந்தவனுக்கு அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான் துணிந்தவனுக்கு ஒரு முறை மரணம்.. துணிவு இழந்தவனுக்கு நித்தம் நித்தம் மரணம்.. தவற்றைக் களையெடு சேமிப்பை விதைபோடு நீயும் துணிந்தவன்தான் வாழ்க்கையென்னும் பக்கத்தில் துணிந்தவன் வீழ்ந்தாலும் எழுவான்.. துணிவு இழந்தவன் எழுந்து எழுந்து வீழ்ந்துகிடப்பான்.. அகக்கண் திறங்கள் துணிவு பிறக்கும் புறக்கண் துறந்துவிடுங்கள்.. ஆக்கம் பிறக்கும்.. ஏன் என்ற கேள்வி பிறக்காவிடில் பிறக்காமலேயே இறந்துவிடுகிறது…

கடவுள் மொழிபேசும் கடவுள் – இரா. சத்திக்கண்ணன்

கடவுள் மொழிபேசும் கடவுள் என் கவனம் விழ கிட்டே தத்தித்தத்தி ஓடிவந்து கடவுள் மொழியில் பேசுகிறது வா வாவென கைகள் நீட்டுகையில் வெட்கப்பட்டு கண்களையும் கன்னங்களையும் மூடிக்கொள்கிறது அவ்வப்போது முன்தலையையும் மறைத்துக்கொள்கிறது சற்று கை நகர்த்தி இருக்கேனா ? என்று அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறது நான் பார்க்காததுபோல் நடிக்கும்போது உற்றுப்பார்க்கிறது துளிசத்தம் எழாமல் கைகொட்டுகிறது நான் சட்டென்று பார்க்கையில் அம்மாவின் பின்னால் ஓடி ஒளிந்துகொள்கிறது நான் நகரும்போது கண்ணில் ஏக்கம் தெறிக்க வழியனுப்புகிறது கையசைத்து! கடவுள் மொழிபேசிய கடவுள்!! – இரா. சத்திக்கண்ணன் தரவு: முதுவை…

கவிக்கோ பவளவிழா ​

கவிக்கோ பவளவிழா ​ ​ கவிக்கோ அப்துல் இரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற ஐப்பசி 10 & 11 / அக்.26 & 27 ஆம் நாள்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது.   அரசியல், இலக்கியம், திரைப்படம், கலை, இசை, சமயம், இயல், இதழியல் & ஊடகம் என அனைத்துத் துறைகளையும் சார்ந்த தலைவர்கள், புகழாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குநர்கள், திரைத்துறைப் படைப்பாளிகள், கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள்,…

தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

சிந்தனையை விதைப்பது எழுத்தாளர்களின் கடமை

சமூக மாற்றத்திற்கான சிந்தனையை விதைப்பது  எழுத்தாளர்களின் கடமையாகும்  வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் உரை            வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கட்டுரை நூல்கள் அறிமுக விழாவில் (புரட்டாசி 17 / அக்.04) சமூக மாற்றத்திற்கான சிந்தனையைத் தனது படைப்புகளின் வழியே விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.          கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன்,…

பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி

நான்   நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம்  என்றால் ஒற்றுமையின் சின்னம்…

நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து

    நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டா மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாப்பளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் வேட்கைதீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் மூச்சாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறிப் பெருங்கடலில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து மணம்தந்து உதிரவேண்டும்நான்! நிலவாய் உதித்து வளர்ந்து தேயவேண்டும்நான்! கடவுளோர்நாள் வந்தென்னிடம் கண்முன்னே தோன்றினால், ஈசலாகப் பிறந்து ஓர்நாளில் பிறந்துமடியும் வரமொன்று கேட்பேன் நான்…..நான்! நான், காரைக்குடி பாத்திமா அமீத்து, சார்சா தரவு…

புகை இல்லாத புகைவண்டி – சின்னா சர்புதீன்

புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து   எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார்   வீறுகொண்டு பறக்குதே நீண்டுநெடுங் தூரம்ஓடி   நிற்குமிடம் தன்னிலே மீண்டும்மக்கள் தம்மைஏற்றி   மிகவிரைவாய்ச் செல்லுமே புகையிரதம் எனஇதற்குப்   பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத இன்றும் அது   புகையிரதம் தானடா ஆடுமாடு மனிதர் பொருள்   அத்தனையும் சுமக்குமாம் வீடுபோன்ற அறைகள்பல   வரிசையாக இருக்குமாம் காடுமேடு வயல்நிலங்கள்   கடல்கடந்தும் போகுமாம் நாடிரண்டை மூன்றைத்தொடுத்து…