தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை
(தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம் தொடர்ச்சி) முத்துக்குமார் மரண சாசனம் நமக்குக் கைகாட்டி; கலங்கரை விளக்கம்! தமிழ்நாட்டின் அரசியலை ஒரே ஓர் உயிர், ஒரே ஒரு நொடியில் முற்றிலும் மடைமாற்றி விட்டது. தமிழரின் நலனைக் காவு கொடுக்கும் தன்னலப் பதவிவெறி அரசியல் பின்னங்கால் பிடறியில் அடிவிழ ஓட்டம் பிடித்து விட்டது. வாக்கு வேட்டை அரசியல் அம்மணப்பட்டு அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறது. தமிழ் மக்களை விடுவிக்கும் தமிழ்த் தேசிய சமூக நீதி அரசியல் வீறு கொண்டு எழுகிறது. அது சுட்டெரிக்கும் சுடு நெருப்பாய்…
முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு, பிரித்தானியா
“ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா உலகத்தேயத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு ஈகத்தின் உச்சமாய் தன்னையே தீக்கு இரையாக்கி வீரமரணமடைந்த “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் மாசி 17, 2047 / 28.02.2016 அன்று இலண்டனில் காலிண்டேல் நகரில் (St Matthias church, Rush-grove Avenue, Colindale, Landon Nw9 6QY என்னும் இடத்தில்) நடை பெற உள்ளது. புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைத்…
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு, கொளத்தூர்
தை 15, 2047 / சனவரி 29, 2016
முத்துக்குமார் முகப்பட ஊர்வலமும் நினைவேந்தலும்
தை 15, 2047 / சனவரி 29, 2016 சென்னை தமிழர் எழுச்சி இயக்கம்
நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்
– புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு!…