இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி
ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019 மாலை 6.00 மணி இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18போர்க்காண்டத்தின் சில படலங்கள்தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் தலைமை : பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்பாட்டரங்கம் : பாவலர்கள் அ.உசேன்,இரா.வேலாயுதம்,நெய்தல் நாடன்,இளவரசிசங்கர்நன்றியுரை: இரா.சத்தியராசு புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்!
புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர். அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் அறிக்கை வருமாறு: அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க! முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்! முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர். முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக…
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17
தை 13, 2050 / ஞாயிறு / சனவரி 27, 2019 புதுவைத் தமிழ்ச்சங்கம் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17 பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் பகுத்தறிவாளர்கழகம், புதுவை-தமிழ்நாடு
ஊட்டல் விரும்புவரோ? -முனைவர் க.தமிழமல்லன்
ஊட்டல் விரும்புவரோ? இடுப்பொடியத் துணிதுவைத்தால் இடைமுரிந்து போகுமென்றே எளிதாகச் சலவைசெய்ய எந்திரங்கள் வாங்கிவிட்டார்! அடுப்பருகில் நின்றுபுகை அணைக்காமல் ஆக்குதற்கும் ஆவியினைப் பெற்றுவிட்டார்! அப்புகையைப் போக்குதற்கும் அடுப்பின்மேல் புகைபோக்கி அமைத்துவிட்டார், போதாவா? அம்மியிலே அரைக்காமல் கலக்கிகளை வாங்கிவந்தார்! கடுப்பின்றிக் கைகால்கள் வலிக்காமல் மாவரைப்பார்! கண்ணான தாய்மார்கள் கசங்காத உடையோடு! என்றாலும் கறிச்சோற்றை இளம்பெண்கள் ஆக்குங்கால், என்றேனும் மீக்குழம்பைச் செய்யுங்கால், உப்புகாரம், நன்றாகச் சேர்வதில்லை! நாவிற்கே ஏமாற்றம்! நாவினிக்க உணவகத்தின் சுவையென்றும் வாராது! மென்றுமென்று தின்றாலும் சுவைமேன்மை இல்லையடா ! மெல்லமெல்லக் கிழமைக்கோர் நாள்ஆக்கும் பணிவிடுத்தார்! மெல்லியர்கள்…
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10 புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர் அண்ணாவின் படத்தைத்…
இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை
புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் – பகுத்தறிவாளர் கழகம், புதுவை தமிழ்நாடு
இலக்கணப் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு
இலக்கணப் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு பாவலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு இலக்கணத் தோடு பாடல் இயற்றும் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு ஒன்றை ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழ் வெளியிடவிருக்கிறது. இத் தொகுப்பில் இடம் பெறப் பின்வரும் விவரங்களை அனுப்புக: பெயர் முகவரி கைப்பேசி தொலைப்பேசி மின்னஞ்சல் வெளியிட்ட நுால்கள் பெற்ற பரிசுகள் பயன்படுத்திய யாப்பு வகை பங்குபெற்ற பாட்டரங்கம் இடம்பெற்றுள்ள கட்செவிக்குழு முகவரி உங்கள் படத்தை இணைத்து அனுப்புங்கள் முகவரி: முனைவர் க.தமிழமல்லன், ஆசிரியர், ‘வெல்லும் தூயதமிழ்’ 66 மா.கோ தெரு தட்டாஞ்சாவடி புதுச்சேரி-605009…
யாப்பரங்கம் -2 பாவலர்களின் உயர்வு
யாப்பரங்கம் -2 : பாவலர்களின் உயர்வு ஆறடிஆசிரியப் பா நிலைமண்டில ஆசிரியப் பா இயற்றுங்கள். ‘வெல்லும் துாயதமிழ்’ வெளியிடும். ஓர் அடியில் நான்கு சீர்கள் இருப்பதுபோல் ஆறடிகளிலும் நான்கு நான்கு சீர்கள் அமைத்து இயற்றப்படுவது நிலைமண்டில ஆசிரியப் பா இயன்றவரை எதுகை மோனைகளை மிகுதியாகப் பயன்படுத்திப் பாடலைப்புனையுங்கள். பாடலின் இறுதிச்சீர் ஏ,என்,ஓ,க என்று முடிய வேண்டும். தலைப்பு – பசுமைச் சாலை ஆவணி 04, 2049 / 20.8.2018க்குள் கிடைக்குமாறு அனுப்புக. தொடர்பு எண் 97 91 62 99 79 மின்அஞ்சல் vtthamizh@gmail.com முகவரி…
புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3
புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3 புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் ஆற்றி வருகிறார். சித்திரை 30, 2049 / 13.5.2018 அதன் மூன்றாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் இரண்டாம் காண்டத்தில் அமைந்துள்ள படலங்களின் பொருள்பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர் நெ.நடராசன்…
மு.அறவாழியார் படத்திறப்பு, நெய்வேலி
உலகத்தமிழ்க்கழகம், நெய்வேலி மார்கழி 02, 2048 ஞாயிறு திசம்பர் 17,2017 திருவள்ளுவர் கோட்டம், நெய்வேலி 03 தமிழ்த் தொண்டர் பொறிஞர் அறவாழியார் படத்திறப்பு படத்திறப்பு: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் உரை: முனைவர் க.தமிழமல்லன்
கடலூரில் தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா
தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா, கடலுார் கடலூர் மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் திருப்புமுனைப் பயிற்சி நடுவத்தில் நடைபெற்றது. பேரா.இராச.குழந்தை வேலனார் தலைமை தாங்கினார். ‘தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள்‘ என்னும் தலைப்பில் முனைவர் க.தமிழமல்லன் சிறப்புரை நிகழ்த்தினார். புலவர் சிவ.இளங்கோவன், கதிர்.முத்தையன் ஆகியோர் பாவேந்தர், பாவாணர் அளித்த தனித்தமிழ் இயக்கப் பங்களிப்புக்குறித்துப் பேசினர். முன்னதாகப் படத்திறப்பும் பாவரங்கும் நடைபெற்றன.
புதுச்சேரி தனித்தமிழ்இயக்கத்தின் தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி
தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி தனித்தமிழ் இயக்கம் நடத்துகிறது! பரிசு உரூபா 1000.00 கடைசிநாள்: மாசி 16, 2048 / 28.2.2017 சிறுவர்கள் படித்தும் நடித்தும் மகிழ்வதற்கேற்ற 3 பக்க நாடகங்கள் 2 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உரூபா 300.00 இரண்டாம் பரிசு உரூபா 150.00 மூன்றாம் பரிசு உரூபா 100.00 ஆறுதல் பரிசுகள் உரூபா 90.00 ஐந்து பேர்களுக்கு. நெறிமுறைகள் 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழில் நாடகங்கள் இயற்றப்பட வேண்டும் 3.நாடகங்கள் மதநம்பிக்கை தவிர்த்த பகுத்தறிவு,அறிவியல் முதலிய புதிய கருப்பொருள்களில்…