தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு – சென்னை

தனித்தமிழ் காப்போம்!                                                                                          தமிழராய் வாழ்வோம் ! தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு –  சென்னை அன்புடையீர் வணக்கம்   தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறோம்….

தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் :நிகழ்ச்சிப்படங்கள்

  முனைவர் க.தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் கி.இ.க. / ஒய்எம்சிஏ அரங்கில் முனைவர் பேராசிரியர் மறைமலைஇலக்குவனார் தலைமையில்  நடைபெற்றது. பாவலர் பூங்குழலி பெருமாள் ஆய்வுரை நிகழ்த்தினார். செயலாளர் பக்தவத்சலம் வரவேற்புரை கூறினார். தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன் ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில்  நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில்   முனைவர் க.தமிழமல்லன  பங்கேற்றார். மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில்  கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில்  நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச்…

என் பா ! – க.தமிழமல்லன்

என் பா ! இயற்றுகின்ற என்பாக்கள் எதுகை மோனை இயல்பாக அமைந்திருக்கும் இன்பப் பாக்கள்! வயல்வெளியில் விளைந்திருக்கும் பயிரைப் போல, வலிமைதரும் வளமைதரும் படிப்போர்க் கெல்லாம்! குயவன்செய் பாண்டமல்ல கருக்கா வெள்ளி! குடங்குடமாய்த் தங்கத்தை உருக்கி வார்த்த உயர்அணிகள் எனும்வைரம் பதித்த பாக்கள்! உயர்எண்ணம் அழகாக ஒளிரும் பாக்கள்! குமுகாய மீட்சிகளைக் கூறும் பாக்கள், கொடியோரின் தீப்போக்கைக் குட்டும் பாக்கள்! அமுங்கிவரும் அடித்தட்டு மக்கள் நன்மை அடைதற்கு முழக்கமிடும் அன்பு வெள்ளம்! உமிமூட்டை அடுக்கிவைத்தே அரிசி என்பார்! உதவாத சொல்லடுக்கிப் பாக்கள் என்பார்! தமிழ்க்கொலையைச்…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 1/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

1/5 முனைவர் க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் :உவமைக் குவியல்! உணர்ச்சிப் படையல்!     எதையும் எழுதலாம் என்பவன் எழுத்தாளன். இதைத்தான் எழுதவேண்டும் என்பவன் படைப்பாளன். இதில் ஐயா தமிழமல்லன் அவர்கள் இரண்டாவது வகை. சிந்துகின்ற வியர்வைத் துளியும், செதுக்குகின்ற மைத்துளியும் செந்தமிழர் வாழ்வுக்கே என்னும் சிறப்புக்குச் சொந்தக்காரர்  ஐயா அவர்கள். உழலும்போது மட்டுமல்ல, உறங்கும்போதும் தமிழர் நலனையே கனவு காண்பவர்  அவர். காட்சிக்காகவோ, பேச்சுக்காகவோ, மேல்பூச்சாக தொண்டாற்றுபவர். அல்லர். தன்னுடைய உடல், பொருள், உயிர் மட்டுமல்ல, குடும்பத்தினரையும் தமிழுக்காய்த் தாரைவார்த்திருப்பவர். அவரின்…

எங்கள் சமஉ – முனைவர் க.தமிழமல்லன்

எங்கள் சமஉ எங்கள் சமஉ இணையே  யற்றவர்! தங்கக் கடத்தல் தலைவர்! மாற்றான் மனைவியைக் கைப்பிடித்து மகளையும் மணந்தவர்! மனைவணி கத்தில் மாபெரும் கொள்ளையர்! ஒருமனை காட்டி இருவர்க்குப் பேசி! உருப்படி யாக உயர்த்தி விற்பவர்! காலில் விழுவதைக் கைகழுவி விட்டவர்! காலைக் காட்டிக் கவிழ்ந்திடச் சொல்லுவார்! மற்றவர் பணத்திலே பதாகை நட்டவர்! கற்றவர் நல்லவர் கறையிலா அறிஞரைப் பார்த்தால் பதறுவார்! வேர்த்துத் தம்மின் அறைக்குள் பதுங்குவார்! அண்ணன் தம்பி, கறைமது விற்பவன், காலைச் சொறிபவன், தேடித் தேடித் திறத்தைப் போற்றி விருதுகள் வழங்குவார்!…

வேட்பாளர் மாண்பு – முனைவர் க.தமிழமல்லன்

வேட்பாளர் மாண்பு தலைவர்: தகுதி என்ன? தலைமைக் கெவ்வளவு மிகுதியாய் நன்கொடை மேல்நீ தருவாய்? வேட்பாளர்: அம்மா வுக்கொன் றளித்துச் சின்ன அம்மா வுக்கும் அளித்து விட்டேன்! அடுத்தத் தலைவர்க் களிக்கும் பெட்டியும் அண்ணிக் கொன்றும் அணியம் ஐயா! தலைவர்: உன்றன் தாய்மொழி என்னவோ உரைப்பாய்? வேட்பாளர்: அன்புத் தமிழ்தான் அகத்தில் வேறு! தலைவர்: தமிழெனச் சொல்லு தமிழெனச் சொல்லு! வேட்பா- தமிழ்தான் தமிழ்தான் தாய்மொழி எனக்கு! தலைவர்: தொகுதி மதிப்பு மிகுதியாய் உண்டா? வேட்பாளர்: தொகுதி முழுவதும் மிகுதியாய் உள்ளவர், நம்சாதி மக்கள்!…

வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!

  உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு புதுச்சேரியில்தி.பி.2047, தைத்திங்கள்(சுறவத்திங்கள்) 2, 3 (16,17.01.2016)ஆகிய நாள்களில் வேல்.சொக்கநாதன் திருமணநிலையத்தில் நடைபெற்றது.   அதில் முனைவர் க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர்  என்னும் விருது வழங்கப்பெற்றது.    படத்தில் அவ்விருதை புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி  முனைவர் க.தமிழமல்லனுக்கு  வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.   படத்தில் பாரிவேந்தர், இராதாகிருட்டிணன் நா.ம.உ,சேனாதிராசா, நா.ம.உ (இலங்கை)ஆகியோரும் இருக்கின்றனர்.

வாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்! – க.தமிழமல்லன்

என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன் எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்! என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்! என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில் எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்! என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால் என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்! சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும் சரியாகப் பேசியவர் எவரு மில்லை சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச் சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர் நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார் நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார் சமற்கிருதம் செத்தமொழி…

மழையே ! – க.தமிழமல்லன்

ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ! மண்மேல் மட்டும் மழைநீ பெய்தால் மக்களுக் கெதுவும் சிக்கல் இல்லை! மனைக்குள் புகுந்தாய், மாடியில் ஏறினாய், மயக்கிடும் திருடன் புகுவது போலே! மகிழுந் தெல்லாம் மறைந்து மூழ்கிட, மழையே பொழிந்தாய்! மடைகளை உடைத்தாய், ஏரியைத் திறந்தாய், ஏழையர் வாட, மாரியே வெளுத்தாய்! மாந்தர் வாழ்க்கை, குலையச் செய்தாய்! தலைமேல் ஏறினாய்! நிலைமையோ மோசம்! தலைநகர் எங்கே? மின்விசை உணவு,வெண்பால்,குடிநீர் என்னும் தேவைகள் எங்கே தொலைத்தாய்? பேருந் தில்லை, சிற்றுந் தில்லை! யாரும் பணத்தை எடுத்திட வழியிலை ! கன்னெய்…

நல்லெழுத்தை மாற்றுவதோ? – க.தமிழமல்லன்

எழுத்தைச் சிதைப்போர் எச்சிலுக்(கு)ஒப்பு தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர்   உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால்   கழுத்து முறிந்துவிடும் காண். குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும்   அறிவில்லார் செய்கொடுமை ஆய். அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும்    தடியாரைத் தாங்கிடுதல் தப்பு. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார்    பழிப்பார் தமிழின் பகை. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம்   முழுத்தமிழ் கொல்வாரை மொத்து கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை   என்னிடம் திருத்துகிறாய் இங்கு.? இதுவரை போதும்…