காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல்
(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை…
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 – முனைவர் சான் சாமுவேல்
(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 1856-இல் தென்னிந்தியாவில் பேசப்படும் ஒன்பது மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக இனங்கண்ட காலுடுவெல் தமது இரண்டாவது பதிப்பில், அஃதாவது 1875-இல், மேலும் மூன்று மொழிகளையும் இணைத்து 12 மொழிகளைத் திராவிட மொழிகளாக இனங்கண்டு காட்டினார். இன்று திராவிட மொழிகளின் எண்ணிக்கை 35-ஐத் தொட்டுள்ளது. வட இந்தியாவில் பேசப்படும் பிராகுயி போன்ற சில மொழிகள் திராவிட மொழிகளின் பட்டியலில் இணையவே தென்னிந்திய மொழிகளாகத் திராவிட மொழிகளை நோக்கிய பழைய குறுகிய பார்வை பரந்து விரிந்து…
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ – முனைவர் சான் சாமுவேல்
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ ஐரோப்பிய நாட்டு அருட்தொண்டர்களுள் காலுடுவெல்லின்(Caldwell) அளவிற்குத் தமிழாய்வில் மிகப்பெரும் பங்களிப்பு நல்கியோராக எவரையும் குறிப்பிட முடியவில்லை. தமிழரின் விழுமிய அறக்கோட்பாடுகள் ஐரோப்பிய நாட்டு அறிஞர் உலகில் பரவ அடியெடுத்துக் கொடுத்தார் வீரமாமுனிவர் எனப்பெயரிய பெசுக்கி எனும் இத்தாலிய நாட்டு இறைத்தொண்டர். அச்சுப்பொறியினைத் தரங்கை மண்ணில் நிறுவி நவீன இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து அச்சுக்கலையினைத் தமிழர் கையில் வழங்கினர் சீர்திருத்தச் சபையினைத் தமிழ் மண்ணில் நிறுவிய செருமன் நாட்டு இறையடியார் சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg) அவர்கள். தமது முன்னோடிகளான இவர்களது…
இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்
இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…
வரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு
தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்பு, சப்பானிய, கொரிய, சீனக் கூட்டுறவோடு சென்னையில் செயல்பட்டுவரும் ஆசியவியல் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களோடு இன்னும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புக்களும் இணைந்து அனைத்துநாட்டுக் கூட்டு முயற்சியாகத் தமிழகத்தின் தென்கோடிக் குமரியில் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை அடுத்து வரும் வைகாசி 03-05 / 2048 / 2017ஆம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக நடத்தவிருக்கின்றன. அனைத்துலகு நோக்கிய திருக்குறளின்…
மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு
மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு மொரிசியசு நாட்டில் திருக்குறள் தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல் நிறுவனத்தின் கூட்டுறவோடு இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின் முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், மொரிசியசு நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டுத்தரத்துடன் மிகச்சிறப்பாக…