இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்

சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார்.

தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த கருத்துகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தெரிவித்தார்.

அவர்களிடம் தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடலில் முனைவர் வி.சி.சந்தோசம், முனைவர் கு.மோகன்ராசு, இலக்குவனார் திருவள்ளுவன், முனைவர் கா.அரங்கராசன், அக்கினி சுப்பிரமணியன், கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர், திருக்குறள் இலலிதா முதலான பலரும் கலந்து கருத்துகளைத் தெரிவித்தனர்.

இரீயூனியனில் பணியாற்றிய முனைவர் ப.மருதநாயகம் அங்குள்ள தமிழர் – தமிழ் நிலை குறித்து விளக்கினார்.

நன்றியுரையின் பொழுது இலக்குவனார் திருவள்ளுவன், இரீயூனியன் தமிழர்களுக்குக் கிரயோல் மொழி மூலம் தமிழ் பயிற்றுவிப்பதற்கு விடுத்த வேண்டுகோளை இயக்குநர் முனைவர் சான்சாமுவேல் ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டு அவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இரீயூனியனில் இருந்து வந்த தமிழன்பர்கள் வருமாறு :

1. ஆச்சார்யசுவாமி நீலமேகம் (Acharya swami Dr.Nilamegame)

2. வெள்ளையன் (Velleyen Jean Yoland)

3. ஞானி (Ethouaria Gianny)

4. பெருனார்டு (Goulamoussene Bernard)

5. தேனி (Goulamoussene Dany)

6. கிளேடி(Goulamoussene Marie Gradys)

7. இரஃபேல் (Modely Raphael)

8. மோடிலி (Modely Amandine)

9. சோனியா (Pinguin Marie Sonia)

உலகெங்கும் தமிழ் மக்கள் தமிழைத் தொலைத்துக் கொண்டுள்ளனர். எனினும் தமிழை மீட்க வேண்டும் என்ற உணர்வு அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், நாளும் தமிழை அழித்துக் கொண்டுள்ள தமிழ் மக்கள என்று விழிப்புணர்வு பெறுவார்கள் என்று தெரியவில்லையே!

[படங்களைச் சொடுக்கினால் பெரிதாகத் தெரியும். ] 

String could not be parsed as XML