நானிலத்தில் நற்றமிழ்த்தொண்டாற்றுவோர் நனிசிலரே உளர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் இன்று பவளவிழா காணும் பைந்தமிழறிஞர் பா.வளனரசு ஆவார். எழுத்தால்,  பேச்சால், கற்பிப்பால், பதிப்பிப்பால், ஆற்றுப்படுத்தலால் என ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் தொண்டாற்றி ஒல்காப்புகழ் பெறும் உயரறிஞர் இவர்.   (தனித்)தமிழ் உணர்வைத் தாம் பெற்றதுடன் அல்லாமல் 45 ஆண்டுகாலக் கல்விப்பணியில் மாணாக்கர்களுக்கும் ஊட்டியவர். தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவராகத் திகழ்ந்து   மக்களை நல்ல தமிழை நாடச்செய்யும் நாவலர் இவர்.  இதன் சார்பில்  1967 முதல் கட்டுரைப்போட்டி நடத்தி மாணவச்செல்வங்களை அயற்கலப்பில்லா தனித்தமிழ்த் திசைக்கண் ஆற்றுப்படுத்தும்…