முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்
திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார் கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த, அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும் முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள் ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00 காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி நிகழ்விடம்: கோ இல்லம், எண்…
முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ – இலக்குவனார் திருவள்ளுவன்
முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ பிற துறைகளில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால்தான் அறிவியல் தமிழ் வளர்ந்து கொண்டுள்ளது. அத்தகையவர்களுள் ஒருவராகவும் இலக்கியத் தமிழ் ஈடுபாட்டாளராகவும் திகழ்பவரே முனைவர் பொறிஞர் மு.பொன்னவைக்கோ. முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்தில் (இப்போதைய விழுப்புரம் மாவட்டம்) வானூர் வட்டத்தில் உள்ள செங்கமேடு என்னும் சிற்றூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மன்னர் பாரி வள்ளல் பரம்பரையைச் சார்ந்த தெய்வத்திரு. சு.முருகேசர், தெய்வத்திருவாட்டி மு.பொன்னிக்கண்ணு அம்மையார் வாழ்ந்தனர். இவ்விணையரின் மக்கள் எழுவருள் இளையமகனாகத் தை 17, 1975/30.01.1944 அன்று பிறந்தவர் இரத்தினசபாபதி….