நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் – பல்வழி அழைப்பு வழியாகக் கலந்துரையாடல்
பேரன்புடையீர், வணக்கம். பேரவையின் மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், வரும் தை 15, ஞாயிற்றுக்கிழமை சன. 28 அன்று, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கிய கூட்டத்தில் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் முனைவர் மு. இளங்கோவன். இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இலக்கியச்…
பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!
பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு! புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (பங்குனி 27, 2048 / 09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன். முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக்…