தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனாரிடம் பேசி அவருக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதலான ஏதேனும் ஒரு பணியைத் தர முதலில் எண்ணினார். பெருந்தலைவர் காமராசர் இருந்த பொழுதே தடைநோக்கில் இருந்த அதிகாரக் கூட்டத்தார் கடும்போட்டி இருப்பதால் இவரை அமர்த்த இயலாது எனக் கூறினர். எத்தனைப் போட்டியாளர் இருப்பினும் தமிழுக்காகப் போர்க்களங்களைக் கண்டு சிறைவாழ்க்கையும் பதவி இழப்புகளும் உற்ற பேராசிரியர் இலக்குவனாருக்கு இணையாக அவர்கள் வருவார்களா என எண்ணவில்லை. …