(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5    அமைச்சரினை   வரவழைத்து   இதயா  ரிசுவி அரும்விருதை   ஒட்டமா  வடியில்  தந்தே எமையெல்லாம்   பெருமைசெய்த   சிறப்பெல்  லாமே எமையிணைத்த  பேனாவின்   நட்பா  லன்றோ அமைதியான   கொட்டகலா   மலையின்  ஊரில் அமைந்திருக்கும்   கல்லூரி   தனில  மர்த்தி எமையெல்லாம்  சிறப்பித்த   சுமதி   என்னும் எழிற்கவிஞர்   நட்பெல்லாம்   பேனா  வாலே !!   நல்லமுத   பேனாநண்பர்  பேரவை  யாலே நல்லவர்கள்  பன்னூறு   நட்பாய்  ஆனார் சொல்லமுத   உரைகளாலே   நெஞ்சை …