செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(மாசி 18,  1984 /  மார்ச்சு 01, 1953) செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே!  இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின்.   தன் பதினாறாம் அகவையிலேயே  அரசியலில் காலடி எடுத்து வைத்தார்; கட்சியில் படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டார். தந்தையின் ஒத்துழைப்பால் இவர் வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலர், துணைப்பொதுச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார்.  வேறு உயர் பதவிக்கு வர விழைந்தும், தந்தையின்  இப்போதைய உடல்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவராக உயர்ந்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு…

நல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளியீட்டு விழா

‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நூல் வெளியீட்டு விழா   முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை, இராசரத்தினம் கலையரங்கில் மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 அன்று நடைபெற்றது.   முதல் நூலை நூலாசிரியர் நன்னன் வெளியிட, தி.மு.க. பொருளாளர் மு.க.தாலின் பெற்றுக்கொண்டார்.   மு.க.தாலின், தன்னுடைய வெளியீட்டுரையில், “தமிழை – தமிழாக எழுத வேண்டும் என்று 13 நூல்களை நன்னன் எழுதியிருக்கிறார். ‘தமிழ்படும்பாடு’ என்று 9 நூல்களை…

மத்தியில் மதச்சார்பற்ற அரசு உருவாக வேண்டும்: மு.க.தாலின் பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும்  சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை ஆற்றி வரும் மு.க.தாலின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்குஅளிக்குமாறு கேட்டார்விராலிமலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் மணப்பாறை, வையம்பட்டி, வட மதுரை,  மற்றும் குசிலியம் பாறை ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கரூர் திருவள்ளுவர்  திடலில்  நடைபெற்ற  பொதுக்  கூட்டத்தில் மு.க.தாலின் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை…