ஈழத்தில் தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம் தமிழ் ஈழம் சென்று தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி இயற்கை எய்தினார்.           திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி சிரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தினார். ‘புத்தன் பேசுகிறான்’ என்கிற இவரின் கவிதைத் தொகுப்பு மிகவும் பெயர் பெற்றவை. ‘இவர்தாம் பெரியார்’, ‘சோதிடப் புரட்டு’, ‘யார் இந்த இராமன்’ , ‘மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை’ முதலான மன்பதை சார்ந்த நூல்களையும்…