மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (தொல்காப்பியர், தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்…
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’: பன்னாட்டுக் கருத்தரங்கு
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில் இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார். கம்பன் பிறந்த நாளை…
கம்பன் கழகம், காரைக்குடி : மே மாதக் கூட்டம், 2016
67 ஆம் கூட்டம் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூட்டம் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா திருமண மண்டபத்தில் சித்திரை 24, 2047 / மே 07, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்நிரல் இறைவணக்கம் – செல்வி எம். கவிதா வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராசா அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும் காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு…