தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 10,11 & 12 : இணைய அரங்கம் – சூலை 24,2022

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 10,11 & 12: இணைய அரங்கம் ஆடி 08, 2053 ஞாயிறு , சூலை 24, 2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ முன்னை மும்மைத் துணைவேந்தர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ மேனாள் தலைவர், பாரதிதாசன் உயராய்வு மையம் முனைவர் (இ)லிங்க.இராமமூர்த்தி ஆய்வுத் தகைமையாளர் . இந்தியக் குமுகாய அறிவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு. கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு…

தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ

தக்காரைப் போற்று! தக்காரை நெஞ்சாரப்             போற்ற வேண்டும் – ஆற்றல் மிக்காரை அரியணையில்             ஏற்ற வேண்டும். தமிழ் காக்கும் நல்லோரைக்             காக்க வேண்டும் – அதுவே தமிழ் வளர நாமாற்றும்             சேவை யாகும். தமிழென்றும் தாழ்வின்றி             தழைக்க வேண்டும் – அந்தத் தமிழ்ச் சேவை செய்துஉயிர்             வாழ வேண்டும். எக்காலும் இந்நோக்கில்             மாற்றம் இன்றி – வாழ்வில் ஏற்றமுடன் பணியாற்றும்             ஆற்றல் வேண்டும் என்றெம்மை ஈன்றவளை             என்றும் போற்றி – தக்காரின்…

மாற்றம் விரைவில் உண்டாகும் – மு. பொன்னவைக்கோ

மாற்றம் விரைவில் உண்டாகும்   தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அவனே மாந்தன் முதலேடு அளித்தான் உலகப் பண்பாடு ஒன்றே குலமெனும் உயர்வோடு உரைத்தான் தெய்வம் ஒன்றென்று யாதும் ஊரே என்றுரைத்தான் யாவரும் கேளிர் என்றழைத்தான் அறமே வாழ்வின் நெறியென்றான் அருளே பொருளின் முதலென்றான் அன்பின் வழியது உலகென்றான் ஆசைப் பெருகின் அழிவென்றான் ஒழுக்க வாழ்வே உயர்வென்றான் அழுக்கா றின்றி வாழென்றான் ஒன்று பட்டால் வாழ்வென்றான் ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான் பணிதல் யார்க்கும் நன்றென்றான் பகையே வாழ்வின் இருளென்றான் சினமே உயிர்க்குப்…

நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ.

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்! பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலென பொங்கலிட்டு வாழியவே!  முனைவர் மு.பொன்னவைக்கோ

பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல்

பேராசிரியர் இரா.இளவரசு  அவர்களின்  நினைவேந்தல் நிகழ்ச்சி தென்மொழி  இயக்கம் சார்பில் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க் களத்தில் தி.பி.2046 கும்பம் 10 ஞாயிறு (22-02-2015)அன்று மாலை 3.00 மணியளவில்  நடைபெற்றது. முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் பேராசிரியர் பொற்கோ மறைந்த இளவரசு அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். பேராசிரியர் அரசேந்திரன், முனைவர் இரா .கு.ஆல்துரை, முனைவர் அரணமுறுவல், திருவினர் கி. குணத்தொகையன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வைகறைவாணன், இரா.செம்மல், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகன் ஆகியோரும் திருவாட்டியர் இறை.பொற்கொடி, தழல் தேன்மொழி, மரு. அன்பு (பேரா.இளவரசு…