இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார் ஆ. பதிப்புரை & நன்றியுரை பதிப்புரை(2002) தமிழின் தொன்மைச் சிறப்பையும், முதன்மைச் சிறப்பையும், தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும் உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே! சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல் …